காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள் சங்க நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் உள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த பல ஆயிரகணக்கான மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பழவேற்காடு அடுத்த காட்டுப்பள்ளியில் அதானியின் 330 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் துறைமுகத்தை மேலும் விரிவுபடுத்தி, 6111 ஏக்கர் பரப்பளவில் செயல்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு, பழவேற்காடு பகுதி மீனவ கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மெகா துறைமுகம் சட்ட விரோதமானது என்றும் துறைமுகத் திட்டம் காட்டுப்பகுதியில் தடைசெய்யப்பட்ட செயல்பாடாகும் என்பதால், முன் மொழியப்பட்டுள்ள சட்டவிரோதங்களை கண்டு கொள்ளாமல் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நடத்த இருப்பது மிகவும் வேதனைக்குரியது என்பதை வலியுறுத்தி இன்று 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவை அளித்தனர். கடலோரம் வாழும் மக்களின் மீது கருணை வைத்து இத்திட்டத்தை அறவே தடை செய்ய வேண்டும் என மீனவ கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்தனர்.

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அந்த திட்டத்தை செயல்படுத்த முயலும் பட்சத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 69 மீனவ கிராமங்களில் வசிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரித்தனர்.

நிழல்.இன் – 8939476777