தேனி அருகே பல்லவராயன் பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக அளவில் காளைகள் வரவால், குலுக்கல் முறையில் காளைகள் தேர்வு…
1 min read
தேனி மாவட்டம், பல்லவராயன் பட்டி அருள்மிகு வல்லடிகாரர் சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான காளைகள் முன்பதிவு நடைபெற்றது. இதில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நாளன்று 470 காளைகள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கால்நடை துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், 1500க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் குவிந்ததால் குறிப்பிட்ட 470 காளைக்கு அனுமதி கொடுப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனை, தொடர்ந்து ஜல்லிக்கட்டு விழா கமிட்டி மற்றும் காவல்துறையினர் குலுக்கல் முறையில் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள காளைகளை தேர்வு செய்தனர். இதன்படி காளை உரிமையாளர்களின் பெயர்களை துண்டு சீட்டில் எழுதி, பெரிய பாத்திரத்தில் போட்டு பொது இடத்தில் வைத்து குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர்.

செய்தியாளர் – அழகர்
நிழல்.இன் – 8939476777