மீஞ்சூரில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், அதானி துறைமுகம் விரிவுபடுத்துவதை எதிர்த்து, சாலை மறியல்…
1 min read
காட்டுபள்ளியில், அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து, மீஞ்சூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சாலை மறியல் நடத்தபட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மதன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியலுக்கு, மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் மாவட்ட பொருளாளர் பிரசாந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய்கணேஷ், மீஞ்சூர் கதிரவன் ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த மறியலில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, காட்டூர் சாலையில் இருந்து நேரு சிலை வரை சென்று, திரும்பவும் காட்டூர் சாலையில் வந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் கலந்து கொண்ட மாநில செயலாளர் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், காட்டுபள்ளியில் அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்வது, இயற்க்கைக்கு முரணான செயல் எனவும், அதனால் பழவேற்காடு உள்ளிட்ட மீனவ கிராமங்கள் அழிந்து போகும் வாய்ப்பு உள்ளது எனவும், மேலும் காட்டுபள்ளியை அடுத்து உள்ள பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள இயற்க்கை வளங்கள் அழிந்து போகும், எனவும் கூறினார்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777