2019-ம் ஆண்டிற்கான, தமிழகத்தின் சிறந்த 3 காவல் நிலையங்கள் தேர்வு…
1 min read
மாநில அளவில் சிறந்த காவல் நிலையங்களுக்கான முதலமைச்சர் விருதை சேலம் மாநகரம்¸ நகர காவல் நிலையம் தட்டி சென்றுள்ளது. இரண்டாம் இடத்தை திருவண்ணாமலை மாவட்டம்¸ நகர காவல் நிலையமும்¸ மூன்றாமிடத்தை சென்னை பெருநகர கோட்டூர்புரம் காவல் நிலையம் இடம் பிடித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையங்களுக்கு குடியரசு தினத்தன்று கோப்பை வழங்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்பட்ட காவல் நிலையங்களுக்கு தமிழக காவல்துறையினர் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கபட்டு வருகிறது.

திருவண்ணாமலை
செங்கம் அடுத்த சாத்தனூர் அணை காவல் நிலையம் சார்பில், பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில், செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் சாத்தனூர் அணை காவல் ஆய்வாளர் லதா சிறப்பு உதவி ஆய்வாளர் ஏழுமலை தலைமை காவலர் இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் சென்றால் ஏற்படும் உயிர் சேதங்கள் மற்றும் விளைவுகள் குறித்து நாடக கலைஞர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777