திருவண்ணாமலையில், எலைட் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்…
1 min read
திருவண்ணாமலை வேட்டவலம் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில், டாஸ்மாக் எலைட் மதுக்கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த கடையில் உள்நாடு மற்றும் வெளிநாடு உயர்ரக மது வகைகள் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று வாங்கும் வகையில் குவாட்டர், ஆப் என குறைந்த விலை பாட்டில்கள் இங்க கிடைக்காது, என கூறப்பட்டாலும்,
இப்பகுதியில் மதுக்கடை வந்தால் தங்களுக்கு இடையூறாக இருக்கும் எனக் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, வேட்டவலம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது, தகவல் அறிந்த டவுன் ஏடிஎஸ்பி கிரண்ஸ்ருதி, கலால் டிஎஸ்பி பழனி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் “மதுக்கடை திறக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம்” என்று பொது மக்கள் உறுதியாக சொன்னதால், அதை தொடர்ந்து “அப்பகுதியில் மதுக்கைடை திறக்கபட மாட்டாது” என்று அதிகாரிகள் கூறியதால், மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777