March 1, 2021

திருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் 32 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது…

1 min read

திருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் 32 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணி,
திருவண்ணாமலை முக்கிய வீதிகளில் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. அரவிந்தன் அவர்களின் உத்தரவின் பேரில், ஏ.டி.எச்.பி கிரண் சுருதி அவர்கள் மற்றும் டி.எஸ்.பி அண்ணாதுரை அவர்களின் மேற்பார்வையில், துப்பாக்கி ஏந்தி போலீசார் முக்கிய வீதிகளில் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற பதாகைகளுடன் விழிப்புணர்வு அணிவகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில், திருவண்ணாமலை உதவி ஆய்வாளர் சுந்தரேசன், நகரப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், நூற்று கணக்கான ஆண் மற்றும் பெண் பயிற்சி காவலர்களும் விழிப்புணர்வு பதாகையை கையில் ஏந்தி பேரணியில் சென்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed