திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலையத்தில், மகா அபிஷேகம் நடைபெற்றது…
1 min read
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய நான்காம் ஆண்டு சம்வஸ்ராபிஷேகம் (வருஷாபிஷேகம்) இன்று காலை யாகசாலை மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று இரவு விநாயகர் மற்றும் தங்க பூத வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

திருவண்ணாமலை
தண்டராம்பட்டு சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையில், குடிநீர் இணைப்பு தொட்டி, கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகம்…

திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலை மார்பு ஆஸ்பிட்டல் எதிரே, நீண்ட காலமாக குடிநீர் வாழ்வு பழுதாகி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அது சாலை ஓரத்தில் உள்ளதால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும், ஒரு சில சமூக விரோதிகள் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு, அந்தத் தண்ணீரில் அசுத்தம் செய்கின்றனர் இதனால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. அதை சரி செய்ய பொது மக்கள் பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் கூறியும், அதை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777