March 2, 2021

கோட்டைபட்டினத்தில் மஜக வினர், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில், விவசாயிகள் தாக்கபட்டதை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில், டெல்லியில் டிராக்டர் ஊர்வலம் நடத்திய விவசாயிகளை தாக்கியதை கண்டித்து மஜக பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் எம்எல்ஏவுமான தமீம்அன்சாரி தலைமையில் அக் கட்சினர் கோட்டைப்பட்டினம் கடைவீதியில் இன்று மறியலில் ஈடுபட்டனர்…
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் காவல்துறையை ஏவிவிட்டு தடியடி நடத்திய மத்திய அரசை கண்டித்தும். மேலும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி அமைதியான வழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் தாக்கப்பட்டதை கண்டிக்கின்றோம் என கோஷங்கள் எழுப்பியும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாஜகமாநில பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன்அன்சாரி. அமைதியான முறையில் டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசு இதற்கான விளக்கத்தினை அளித்திட வேண்டும்.மேலும், அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தி இந்திய குடியரசு தினமான இன்று நாட்டின் தலைநகரான டெல்லியை போர்க்களம் ஆக்கிய பிரதமர் மோடி இதற்கான தக்க பதில் கூற வேண்டிய நிலை வரும் என கூறினார்.

மறியல் போராட்டத்தில் புதுக்கோட்டை
மாவட்டசெயலாளர் முபாரக்அலி,
மாவட்டதுணைச் செயலாளர்கள் சாஜுதீன்,
செய்யதுஅபுதாஹீர், மாநில விவசாய சங்க செயலாளர் அப்துல்சலாம், மாநிலசெயற்குழு உறுப்பினர் அஜ்மீர்அலி உள்ளிட்ட மாஜக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed