திருவள்ளுர் மாவட்ட 72 வது குடியரசு தின விழாவில், தேசியக் கொடியை ஏற்றினார் ஆட்சியர் பொன்னையா…
1 min read
திருவள்ளுர் மாவட்ட 72 வது குடியரசு தின விழா மிக சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கொடியை ஆட்சியர் பொன்னையா அவர்கள் பறக்கவிட்டார். அதை தொடர்ந்து சமாதானப் புறாவை பறக்கவிட்டும் மூவர்ண பலூன்களை பறக்க விட்டும் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும் அவர் வழங்கினார்.

நாட்டின் 72வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஆட்சியர் பொன்னையா தேசியக்கொடி ஏற்றினார். பின்னர் சமாதான புறாவைப் பறக்க விட்டு, மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார். பின்னர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

பல்வேறு துறை சார்பாக 29 பயனாளிகளுக்கு 2 கோடியே 14 இலட்சத்து 73 ஆயிரத்து 181 ரூபாய் மதிப்பில் நல திட்ட உதவிகளை வழங்கினார். 120-க்கும் மேற்ப்பட்ட அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல்.இன் – 8939476777