பொன்னேரியில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினர், டிராக்டர் பேரணி…
1 min read
தலைநகர் டெல்லியில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 62-வது நாளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். குடியரசு நாளான இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது விவசாயிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் சண்முகம் தலைமையில், கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி கல்லூரி அருகில் இருந்து, பொன்னேரி பஜார் வீதிக்கு டிராக்டர் பேரணி நடத்த முயன்றனர்.

அதற்க்கு, காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். அப்போது காவல் துறையினர் அவர்களை இரும்பு தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதமும். தள்ளு முள்ளும் ஏற்பட்டது.

இதனையடுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சண்முகத்துடன், பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் பேச்சுவார்த்தை நடத்தினார், பின் 500 மீட்டர் வரை டிராக்டர் பேரணி செல்ல அனுமதி அளித்தார். இதனையடுத்து, கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி கல்லூரி அருகில் இருந்து பேரணி புறப்பட்டது அதில் டிராக்டர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் திரளானவர்கள் பேரணியாக சென்றனர். அதில் கலந்து கொண்ட விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.

500 மீட்டர் தூரத்தில் காவல் துறையினர் இரும்பு தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்தனர். ஆனால் பேரணியில் வந்தவர்கள் மீண்டும் தங்களை, பொன்னேரி வரை செல்ல அனுமதி கேட்டு முரண்டு பிடித்தனர். அப்போது அவர்களிடம் டி.எஸ்.பி, உங்களுக்கு பேரணி நடத்த அனுமதி கொடுக்கபட்டது. ஆனால், நீங்கள் இந்த பேரணியை மேலும் தொடர்ந்தால் கைது நடவடிக்கை இருக்கும் என எச்சரித்து, பின் அதற்கான வாகன ஏற்பாடுகளை செய்தார்.

பின்னர், கண்டன உரை நிகழ்த்த அனுமதி கேட்டனர். அதற்க்கு டி.எஸ்.பி சம்மதிக்கவே, கண்டன உரை நிகழ்த்திய பின், மீண்டும் கோஷங்களை எழுப்பி, தங்கள் எதிர்பை பதிவு செய்துவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொது செயலாளர் சண்முகம், டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவிப்பதாகவும், 62 நாட்களாக அமைதியாக நடந்து வந்த விவசாயிகள் போராட்டத்தில் காவல் துறை அனுமதியோடு டிராக்டர் பேரணி நடத்தப்பட்டதில் மத்திய அரசு தன்னுடைய குண்டர்களை திட்டமிட்டு உள்ளே நுழைத்து சீர்குலைத்தது எனவும்,

தமிழகம் முழுவதும் தடையை மீறி வெற்றிகரமாக டிராக்டர் பேரணி நடந்து வருகிறது எனவும், மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனவும், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் எனவும் சண்முகம் தெரிவித்தார்.

இப்பேரணியில், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த தோழர்கள் ஜானகிராமன், கலாம், அனிப், ஜீவா, கோபால், மதன், பாண்டியன், சேகர், ஜெயவேல் ஆகியோர் உட்பட பெரும் திரளான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

நிழல்.இன் – 8939476777