March 1, 2021

ஆவுடையார் கோயில், மீமிசல், ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம், மீமிசல் பகுதியில் அமைந்துள்ள,
ஸ்ரீ வீரமாகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதிகாலை முதலே கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று 6 கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்ற நிலையில், காலை சிவாச்சாரியர்கள் தீர்த்தக கடங்களை தலையில் சுமந்தவாறு ஸ்ரீ வீரமாகாளி விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் தீபாராதனை நடைபெற்றது.

இதன் பின்னர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர் பெருமக்களுக்கு சிறப்பான அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வீரமாகாளி அம்மன் பரிவார தெய்வ ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவினை மீமிசல், முருகனிவயல், தொடரியேந்தல், சத்திரம்பட்டினம் பகுதி கிராம மக்கள் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கோவில் செயல் அலுவலர் பிருந்தாதேவி தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் 5கிராம மக்கள் பலஆயிரம் பக்தர்கள் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed