திருவள்ளூர் அருகே, குத்தம்பாக்கத்தில் மர கிடங்கில் தீ விபத்து…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மரம் மற்றும் பிளாஸ்டிக்காலான பேலட்டுகள் தயார் செய்து வைக்கும் கிடங்கு உள்ளது. அதில், இன்று மதியம் ஒரு மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக பூந்தமல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

உடனே, பூந்தமல்லி, திருவள்ளூர், திருவூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் போராடி வருகின்றனர். வானுயர கரும்புகை ஏற்பட்டுள்ள காரணத்தால் தீயை அணைப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனினும், தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

5 மணி நேரமாக எரிந்து வரும் தீயில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் இருந்திருக்கக் கூடும் எனவும், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

நிழல்.இன் – 8939476777