அறந்தாங்கியில், காலாவதியான சிக்கன் விற்பனை செய்த பேக்கரி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்…
1 min read
அறந்தாங்கி பெரியகடை வீதியில் “கேக் வாக்” என்ற கடையில் சிக்கன் வகைகளை நெருப்பில் அரை வேக்காட்டில் வேக வைத்து காலாவதியான சிக்கன் வகைகளை விற்பணை செய்து வந்துள்ளனர்.
இது தெரியாமல் அங்கு உணவு பிரியர்கள் சிக்கன் ரகங்களை தொடர்ந்து வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்த சிக்கன்களை சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அருகருகே உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தனர்.

இத்தகவல் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்ததும் அத்துறையை சேர்ந்த அதிகாரி சிவக்குமார் தலைமையில் கடையில் ஆய்வு செய்தார். கடைக்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் அறந்தாங்கி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுபோன்று, காலாவதியான உணவு பொருட்களை நகரில் விற்பணை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777