கள்ளகுறிச்சியில், பத்திரிகையாளர் மகள், தேசிய அளவில் நடக்கும் கட்டுரை ஆய்வு போட்டிக்கு தேர்வு…
1 min read
கள்ளகுறிச்சி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கும் மாநில அளவிலான போட்டி நடத்தபட்டது. அதில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின், மாநில நிர்வாக குழு உறுப்பினர் இரமேஷ்பாபு அவர்களின் மகள், “ஆர். அவந்திகா” தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு தேர்வு பெற்றுள்ளார். அவரை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் DSR. சுபாஷ் அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார், அப்போது அவருடன் தேசிய குழு உறுப்பினர் கடலூர் ரமேஷ்குமார், மாநில இணைப் பொதுச் செயலாளர் ஆர் கே முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777