ஊத்துக்கோட்டை அருகே, பட்டா மாற்றத்திற்க்கு, 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது…
1 min read
திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பெண்ணலூர்பேட்டை அடுத்த வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில், மூர்த்தி என்பவர் தனது நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர் மோகன பிரியாவிடம் கேட்டுள்ளார். அதற்கு மோகனப்பிரியா ரூபாய் 15,000 பணம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மூர்த்தி பத்தாயிரம் தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று திருவள்ளூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைசெல்வன் தலைமையிலான போலீசார், ரசாயனம் தடவிய 10,000 ரூபாய் நோட்டுகளை மூர்த்தியிடம் கொடுத்தனர்.

அதனை பெற்று கொண்ட அவர், கிராம நிர்வாக அலுவலர் மோகன பிரியாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த பணத்தை வாங்கிய போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மோகன பிரியாவை கையும் களவுமாக பிடித்து. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் மோகன பிரியாவை கைது செய்தனர்.
செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777