எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரையில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு, அடிகல் நாட்டப்பட்டது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட அருந்ததி நகர் பகுதியில் உள்ள, 13 பயனாளிகளை தேர்வு செய்து,

அவர்களுக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் அவர்களுக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டம் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், பேட்டைமேடு சிலம்பரசன்,சுப்பிரமணி, ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777