March 2, 2021

திருவண்ணாமலையில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” நிகழ்ச்சி துவங்கப்பட்டது…

1 min read

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்வை, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் துவங்கினார். இந்நிகழ்ச்சியின் மூலம், அடுத்த 30 நாட்களில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தானே நேரடியாக மக்களை சந்தித்து, மக்களிடம் மனுக்களை பெற உள்ளார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் மனுக்களை பெறும் பிரச்சாரத்தை, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை திருவண்ணாமலையில் தொடங்கினார்.
திருவண்ணாமலை,செங்கம்,கீழ்பென்னாத்தூர்,கலசப்பாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

பின்னர், அவர் பேசுகையில், இன்று பெறப்படும் மனுக்களின் மீது திமுக ஆட்சி அமைத்தவுடன், 100 நாட்களில் தீர்வு காணப்படும், மனுக்களின் மீது தீர்வுகான தனித்துறை அமைக்கப்பட்டு, சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தீர்வுகாணப்படும் என்றார்.

திமுக ஆட்சியில், நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய திட்டங்கள் சிறப்பாக உள்ளதாகவும், தண்ணீர் இல்லாத காடு என்று அழைக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் திமுக ஆட்சியில் தான் தண்ணீர் நிறைந்த மாவட்டமாக மாறியதாகவும் ஸ்டாலின் கூறினார். மக்களின் கனவுகளை நிறைவேற்றும் அரசாக திமுக ஆட்சி அமையும் என்றார்.

பொதுமக்கள் கொடுத்த மனுக்களை ஒரு பெட்டிக்குள் வைத்து பூட்டு போட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது .திமுக ஆட்சிக்கு வந்து பதவி பிரமாணம் எடுத்த அடுத்த நாள் இந்த பெட்டியை நானே திறந்து இதற்காக தனி இலாக்கா உருவாக்கி ஒரு குழு அமைத்து அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து 100 நாட்களில் தீர்த்து வைப்பேன் என்றார்.

பொதுமக்கள் கொடுத்த மனுக்களில் இருந்து சில மனுக்களை எடுத்து அவர்களிடம் குறைகளை கேட்டுறிந்தார். அதை தொடர்ந்து இன்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed