May 13, 2021

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்ததால், பக்தர்கள் சாலை மறியல்…

1 min read

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் தை மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் மூலம், தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையை மீறி மாலை 6 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந் நிலையில், சரியாக ஒன்பது மணி அளவில் எமலிங்கம் அருகே கிரிவல பாதையில் கிரிவலம் சென்ற பக்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறையினர் பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து உற்சாகத்துடன் பக்தர்கள் வேகவேகமாக கிரிவலம் சென்றனர்.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தொடர்ந்து பதினோராவது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின்கீழ் கடந்த 10 மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கவும் பொதுமக்கள் நலன் கருதி, தை மாத பௌர்ணமி நாள் கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. எனவே, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் மலையினை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து பதினோராவது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாலை 6 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம் மேற்கொண்டு பின்னர் 2,668 அடி உயரமுள்ள மலையை சுற்றி 14 கிலோமீட்டர் கிரிவலம் சென்றனர்,

இந்நிலையில் இரவு 9 மணி அளவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது காவல்துறை சார்பில் கிரிவலப்பாதையில் தடுப்பு அமைத்து பக்தர்கள் கிரிவலம் செல்லாதவாறு தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாத காவல்துறையினர் கிரிவலம் செல்ல அனுமதித்தனர், அதனை தொடர்ந்து பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா” என பக்தி பரவசத்துடன் வேகவேகமாக கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றனர்.
சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் கிரிவலப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, காவல்துறையினர் அனுமதித்த பின்னர் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கிரிவலம் செல்லுகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *