திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கவரைப்பேட்டையில் நடைப்பெற்றது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.எஸ். கோவிந்தராசன் தலைமையில், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

அதில், கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்களாக பதவியில் இருப்பவர்கள், மாவட்டச் சேர்மன், ஒன்றிய சேர்மன்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்று தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பேசினர்.

வருகின்ற 31 ஆம் தேதியன்று பூந்தமல்லிக்கு வருகை தரும் தி.மு.க. தலைவரிடத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு தலைவர் இடத்தில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.எஸ் கோவிந்தராஜன் கூறினார். இந்த கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமாமகேஸ்வரி மற்றும் ஒன்றிய குழு தலைவர் அத்திபட்டு ரவி, உட்பட பல உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கோளுர் கதிரவன், தமிழன் இளங்கோவன், ரவிகுமார், மீஞ்சூர் சுரேஷ், சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செய்திகள் – சுடர்மதி
நிழல்.இன் – 8939476777