புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், திமுக சார்பில், விடியலை நோக்கி, ஸ்டாலின் குரல் நிகழ்சியில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார்…
1 min read
புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், திமுக சார்பில், விடியலை நோக்கி, ஸ்டாலின் குரல், பிரச்சாரம் நடந்தது. இந்த பிரச்சாரத்தில், மாநில மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்பி யுமான, கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்து கொண்டு அறந்தாங்கியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட பொருப்பாளர் ரகுபதி, முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம், ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன், தேர்தல் பணிக்குழு செயலாளர், மணமேல்குடி சேர்மன் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் பொன்கணேசன், சக்திராமசாமி, சேர்மன் உமாதேவி, ஒன்றிய பொருளாளர் சண்முகநாதன், சேர்மன் மகேஸ்வரி, மாவட்ட அவைத்தலைவர் பொன்துரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், எம்பி கனிமொழி எம்பி பேசியபோது, தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றும், கடந்த திமுக ஆட்சியில் ராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் உட்பட பல கோடியில் அறந்தாங்கி தொகுதியில் பணிகள் நடந்துள்ளதாகவும், பேசினார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் மாவட்டகவுன்சிலர் ராமநாதன், வக்கீல் வெங்கடேசன், கார்த்திகேயன், செல்வம், துளசிராமன், நசுருதீன், ஆறுமுகம், காசிநாதன், சரோஜா, பாஸ்கர், ராசேந்திரன், முன்னாள் நகர செயலாளர் ராசேந்திரன், ராமசாமி, முன்னாள் சேர்மன் மாரியப்பன், டி.முத்து, கோட்டை அய்யப்பன், பழக்கடை சிக்கந்தர், மணிமொழியன், சிவசங்கர், பாரதிராஜா, காந்திநாதன், வின்சென்ட் ராசேந்திரன், வரதராசன், அரசர்குளம் பாத்திமாபீவி, நாட்டுமங்கலம் நல்லகூத்தன், வெள்ளைச்சாமி, பெருங்காடு சுப்ரமணியன், முத்தமிழ் பிரகாஸ், எருக்கலக்கோட்டை செந்தமிழ்செல்வன், குணா, தொழில்நுட்பபிரிவு விமல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், கனிமொழி எம்.பி, திமுக பொதுக்குழு உறுப்பினர் கலைமணி வீட்டிற்கு நேரில் சென்று அண்மையில் நடந்த இறப்பு சம்பவம் குறித்து அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து விக்னேஸ்வரபுரத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு நாகுடி சுப்ரமணியபுரம் ஆவணத்தாங்கோட்டை நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார்.
செய்தியாளர் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777