July 31, 2021

தமிழக அளவில், விருது பெற்ற திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு, பாராட்டு விழா…

1 min read

தமிழக அளவில் உள்ள காவல் நிலையங்களில், குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, கொள்ளை போன பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பது, குற்றச் செயல்களை தடுக்க துரித நடவடிக்கை எடுப்பது, உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், சிறந்த காவல் நிலையமாக திருவண்ணாமலை நகர காவல் நிலையம் தமிழக அளவில், இரண்டாம் இடம் பெற்றுள்ளது. கடந்த 26ம் தேதி குடியரசு தின விழாவில் முதல்வர் அதற்கான விருதை வழங்கினார். அதையடுத்து, இன்று (ஜனவரி 30) திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற பாராட்டு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தல் ஊராட்சியில், நீர் நிர்வாகம் குறித்த பயிற்சி முகாம், ஊராட்சி மன்ற தலைவர் ஆர். முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், சமையலர் பணி நியமனத்தில் முறைகேடு, நேர்முகத்தேர்வை நிறுத்த, எஸ்.பி அலுவலகத்தில் புகார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், 42 சமையலர் காலி பணியிடங்கள் நிரப்புவதில், முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே, வருகின்ற பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வு நிறுத்தி வைக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வந்தவாசியை சேர்ந்த, ராஜ மான்சிங் என்பவர் மனு கொடுத்துள்ளார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *