திருவண்ணாமலை பகுதிகளில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது…
1 min read
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவது வழக்கம். இதன் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊனமாவது தடுக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.
அதே போல், திருவண்ணாமலை மாவட்டத்திலும், 2,031 இடங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மொத்தம் 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பஸ்நிலையம் ,
அண்ணாமலையார் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடந்த முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இங்கு 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், கிராம சுகாதார செவிலியர் சுந்தரி ,அங்கன்வாடி பணியாளர் ரேகா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம சுகாதார பணியாளர்கள் சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777