தமிழக ஆந்திர எல்லையில், சோதனைச் சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் போது, 45 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது…
1 min read
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து வந்த தமிழக அரசு பேருந்து வழித்தடம் 103N என்ற பேருந்தை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டதில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 3 பைகளில் 22 பொட்டலங்களாக மறைத்து வைத்திருந்த 45 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பேருந்தில் சந்தேகத்திற்கிடமாக பயணம் செய்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த சின்னா (30), கம்பத்தைச் சேர்ந்த ராஜம்மாள்(55), கேரளாவை கோதுமணி (46) ஆகிய இரு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த ஆரம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் விற்பனைக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.
பின்னர் இவர்களுக்கு வேறு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல்.இன் – 8939476777