திருவண்ணாமலையில், கொரோனாவால் நிறுத்தி வைக்கபட்டு இருந்த, மக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடந்தது…
1 min read
திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 11 மாதங்களாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பொதுமக்கள் குறைதீர் வு கூட்டம் இன்று (01.02.2021) திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். அந்த கூட்டத்தில், வழக்கம் போல் அனைத்து துறை சார்ந்த, அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையில்,
தடுமாறும் இளைஞர்களே தடம் பதிப்போம் வா, என்ற முழக்கத்துடன், பொதுக்கூட்டம்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், திருவண்ணாமலை புதுத்தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கே. மாலிக் பாஷா தலைமை தாங்கினார், தடுமாறும் இளைஞர்களே தடம் பதிப்போம் வா என்ற தலைப்பில், மாவட்ட செயலாளர் முகமது ரியாஸ்ம், இந்திய விடுதலை யுத்தமும், இஸ்லாமியர்கள் சிந்திய ரத்தமும் என்ற தலைப்பில், அமைப்பின் பேச்சாளர் ஸுஜாஅலியும் உரையாற்றினர். கிளை செயலாளர் ஷேக் இஸ்மாயில் நன்றி கூறினார்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல்.இன் – 8939476777