March 1, 2021

திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில், மன நலம் மற்றும் உடல் நலத்தை பாதுகாக்கும் பொருட்டு “மனவளக்கலை யோகா மையம், திறப்பு விழா” நடைபெற்றது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் உடல் நலத்தையும் மன வளத்தையும் பேணிக்காக்கும் பொருட்டு மனவளக்கலை யோகா மையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிற்சாலைகள் மற்றும் வியாபார பெருமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இங்கு உள்ள பொதுமக்களின் நலன் கருதி, தற்போதுள்ள சூழலுக்கேற்ப உடல் நலத்தை பேணிக் காக்கவும், மனநலத்தை பாதுகாத்துக் கொள்ளவும், பயிற்சி அளிப்பதற்காக,

பொன்னேரி மனவளக்கலை அறக்கட்டளை சார்பில் தச்சூரில் புதிய தவ மையம் துவக்க விழா நடைபெற்றது. சென்னை மண்டலம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொறுப்பாளர்களான அருள்நிதி கிருஷ்ணமூர்த்தி, ரவி ஆறுமுகம், மூர்த்தி ஆகியோர் மன்றத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடற்பயிற்சி,தியானப் பயிற்சி,காயகல்ப பயிற்சி குறித்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாகி பேராசிரியர் தசரதன், மன்ற பொறுப்பாசிரியர் ரவி, தலைவர் பிரபாகரன் மற்றும் தச்சூர் கிராம பொதுமக்கள் பெண்கள் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed