பழவேற்காட்டில் 5 வது தேசிய யுனானி மருத்துவ தினத்தை முன்னிட்டு,இலவச யுனானி மருத்துவ முகாம் நடைபெற்றது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஊராட்சியில் உள்ள கிரசன்ட் பள்ளியில் 5 வது தேசிய யுனானி மருத்துவ தினத்தை முன்னிட்டு இலவச யுனானி மருத்துவ முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் ஆரோக்கிய சிறப்பு திட்டத்தின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவ அலுவலர் தாஸ்லின் பானு தலைமையில் நடைபெற்றது.

இதில் 150-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மருத்துவ முகாமில் யுனானி மருத்துவர் டாக்டர் வசிம் அஹமத் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.

பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன், வார்டு உறுப்பினர்கள் அப்துல் முஜிப், ஆரூண் பாஷா, யுனானி மருந்தாளுனர் உம்மு அபியா,செவிலியர் சுல்தானா பானு ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தனர்.

செய்திகள் – பூர்ணவிஷ்வா நிழல்.இன் – 8939476777