மணமேல்குடியில் டாக்டர் அய்யாத்துரை நினைவு ஐந்தாம் ஆண்டு, “மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்” சிறப்பாக நடைபெற்றது…
1 min read
மாவட்டம், மணமேல்குடி
வீரன்பெரியான்
டாக்டர் அய்யாதுரை அவர்கள் நினைவாக நடத்தப்பட்ட ஐந்தாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
அதில், திருச்சி,தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாட்டின் உரிமையாளர்கள் தங்களது மாட்டினை பந்தயத்தில் கலந்துகொள்ள செய்தனர்.

பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என மூன்று பிரிவுகளாக மொத்தம் சுமார் 40க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் கலந்து கொண்டனர்.
பெரியமாடு பிரிவில் முதலாவது பரிசினை தினையாகுடி சிவா, இரண்டாவது பரிசினை அவனியாபுரம் மோகன்சாமிகுமார் மூன்றாவது பரிசினை கடம்பூர் K.A.அம்பாள்,
நாலாவது பரிசினை களனிவாசல் மாரியப்பன்,
ஐந்தாவது பரிசினை பாண்டிகோவில் பாண்டியராஜன் ஆகிய மாட்டுவண்டி உரிமையாளர்கள் பரிசுத் தொகையையும் நினைவு கோப்பை இணையும் பெற்றுச் சென்றனர்.

நடுமாடு பிரிவில் முதல் பரிசினை வைரிவயல் வீரமுனியாண்டவர் இரண்டாவது பரிசினை திருச்சி கிளியூர் நாராயணசாமி, மூன்றாவது பரிசினை திருப்பந்துருதி அஜிம்ராஜா, நான்காவது பரிசினை அம்மன்பேட்டை
வள்ளியம்மன், ஐந்தாவது பரிசினை மாவிலங்கவயல் சுந்தரபாண்டியன் ஆகிய மாட்டின் உரிமையாளர்கள் பரிசுத்தொகை நினைவு கோப்பையினை தட்டிச் சென்றனர்.

கரிச்சான்மாடு பிரிவில் முதல் பரிசினை
அவுணியாபுரம் மோகன்சாமுவேல்,
இரண்டாம்பரிசு நல்லாங்குடி முத்தையா,
மூன்றாம்பரிசு மாவிலங்காவயல்
சுந்தரபாண்டியன், கருப்பூர் வீரையா மற்றும் ஆறுதல் பரிசினை வெல்லாளபட்டி,
பட்டங்காடு ஆகிய மாட்டின் உரிமையாளர்கள் பரிசு தொகையினையும் நினைவு கோப்பையையும் தட்டி சென்றனர்.

இந்நிகழ்வில் மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணிகார்த்திகேயன், துணை பெருந்தலைவர் சீனியார், மணமேல்குடி திமுகஒன்றிய செயலாளர் சக்திராமசாமி,
மாவட்டகவுன்சிலர் நஜிமுதீன், விடுதலை சிறுத்தைகட்சி ஒன்றிய செயலாளர்கள் வீரக்குமார்,முரளி மற்றும் பழனிவேல், மகேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பந்தய விழாவிற்க்கான ஏற்பாட்டினை
வீரன்பெரியான் டாக்டர் அய்யாதுரை அறக்கட்டளையின் சார்பில் கதிர்வளவன்
குடும்பத்தினர் சார்பில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
செய்தியாளர் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777