அறந்தாங்கியில், சாலைபாதுகாப்பு மாதத்தையொட்டி இருசக்கரவாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
1 min read
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து, சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கான இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

ஐனவரி18ம்தேதி முதல் பிப்ரவரி17ம்தேதி வரை சாலை பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கபடுகிறது. அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி நெடுஞ்சாலைதுறை மற்றும் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.

பேரணியை அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அறந்தாங்கி வட்டாச்சியர் மார்டின் லூதர்கிங், உதவிகோட்ட
பொறியாளர் சத்யமூர்த்தி, உதவி பொறியாளர் முத்துகுமார்,ஆய்வாளர்கள் சுபாஷினி, வீரமணி மற்றும் காவல் ஆய்வாளர் ரவீந்திரன், உதவிகாவல் ஆய்வாளர்கள் சாமிகண்ணு, சிவக்குமார், ரோஷ்மா உள்ளிட்ட காவல்துறையினர், நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் என சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல்.இன் – 8939476777