February 27, 2021

அறந்தாங்கியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு மாதவிழா நடந்தது …

1 min read

அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அறந்தாங்கி போக்குவரத்து காவல்துறை ஜே.சி.ஐ சூப்பர் கிங்ஸ் 1234 பவுண்டேசன் இணைந்து நடத்திய 32வது சாலை பாதுகாப்பு மாத விழா நடத்தபட்டது. விழாவினை அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் துவங்கி வைத்தார். அறந்தாங்கி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சாமிகண்ணு அரசு போக்குவரத்து கழக மேலாளர் முத்துராமன் சூப்பர் கிங்ஸ் தலைவர் செல்வகுமார் பவுண்டேஷன் தொகுதி செயலாளர் வெங்கட் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் முன்னதாக மோட்டார் வாகன ஆய்வாளர் சசிகுமார் அறந்தாங்கி பஸ்ஸ்டாண்டில் வந்த பயணிகளுக்கு முககவசம் வழங்கி சாலை பாதுகாப்பு விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து வட்டார போக்குவரத்துப் கழகத்தின் சார்பாக நடந்த கலை நிகழ்ச்சியில் சாலை விபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, கலைக்குழுவினர் செயல்பாடுகளாக விளக்கி, நடித்து காண்பித்தனர். நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் முருகன் ஜான் பிரிட்டோ முகமதுரியாஸ் பிரதிப்பூண்டி காவலர்கள் தங்கராணி தூயவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் -ஆனந்த்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *