September 23, 2021

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின், மாநில,மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்…

1 min read
Spread the love

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கு.வெங்கட்ராமன், பொருளாளர் ஏ.சேவியர், மாநில ஒருங்கிணைப்பாளர் கே.ரமேஷ் குமார் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கே.முருகன் டெல்டா மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.நவமணி, புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில தலைவர் எம்.பி.மதிமகாராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டெல்டா மண்டல தலைவர் கே.நாகராஜன், டெல்டா மண்டல செயலாளர் அ.எழில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ஆர்.ராம்தாஸ், கல்வியாளர் மற்றும் டி.யூ.ஜே வின் ஆலோசகர் டாக்டர்,ஜி.ஆர் ஸ்ரீதர் ஆகியோர் அடங்கிய வரவேற்புக் குழுவின் சார்பாக, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் முத்த பத்திரிக்கையாளர் டி.சௌந்தரராஜன் வரவேற்புரையாற்றினார்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காலை 10 மணி அளவில், கொடியேற்றத்துடன் துவங்கியது, சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர் “ஜனனி” கே.பாலு முன்னிலையில், நவீன நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் ஏ.எஸ்.மணி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்களின் திருவுருவப் படத்தை தமிழ்நாடு அரசின் பாரதியார் விருது பெற்ற பாவரசு, பாரதி சுகுமாரன் அவர்கள் முன்னிலையில், நீதியின் குரல் நிறுவனர் சி.ஆர். பாஸ்கரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் துவக்கத்தில், கவிஞர் தேவகி ராமலிங்கம் மற்றும் … குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்த, நீதியின் குரல் சி.ஆர்.பாஸ்கரன் அவர்கள் பேசுகையில், டி.எஸ். ரவீந்திரதாஸ் அவர்கள் எனக்கு நீண்ட காலமாக நன்கு அறிமுகமானவர். அவருடன் நான் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் பத்திரிகையாளர்களுக்காக அல்லும், பகலும் மிகவும் பல சிரமங்களுக்கு இடையே, கடினமாக உழைத்திருக்கிறார். அவருடைய பாதையில், சிறப்பாக பணியாற்றி பயணிக்கும் தற்போதைய மாநில தலைவராக உள்ள, சகோதரர் டி. .எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களும் மிகவும் சுறுசுறுப்பாகவும், உங்களை எல்லாம் ஒற்றுமையாக வைத்தும் பத்திரிக்கையாளர்களுடைய பாதுகாப்பிற்காக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகா அளவில் சங்கத்தின் நிர்வாகத்தை கட்டமைத்து மிகவும் துரிதமாகவும், மிகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். அவர் தலைமையில் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறப்புடன் பணியாற்ற வேண்டும், பல வெற்றிகள் பெற வேண்டும், என கேட்டு கொண்டார்

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய, நவீன நெற்றிக்கண் பத்திரிக்கையின் ஆசிரியர் ஏ.ஏஸ்.மணி அவர்கள் உரையாற்றுகையில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்கள் இந்த சங்கத்தில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைப்பதற்கு தமிழகம் முழுவதும் இரவும், பகலுமாக சுற்றித்திரிந்து உழைத்து இருக்கிறார். எந்த ஊரில் ஒரு பத்திரியாளருக்கு ஒரு பிரட்சனை என்றாலும், அவர் குரல் முதலில் கேட்கும்.

குறிப்பாக, 2007ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் என்னை பொய் வழக்கு ஒன்றின் மூலமாக, இரவோடு, இரவாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது ரவீந்திரதாஸ் அவர்கள் என்னை சிறையில் வந்து சந்தித்ததுடன் மட்டும் இல்லாமல், பல போலீஸ் அதிகாரிகளிடம் நேரில் சென்று எனக்காக வாக்குவாதம் செய்து என்னுடைய விடுதலைக்காக உழைத்திருக்கிறார். அதேபோல், தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும், பல ஊர்களிலும் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு, அவர் பாதுகாப்பாக இருந்து இருக்கிறார், என கூறினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, அனைத்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா அவர்கள் உரையாற்றுகையில், பத்திரிகையாளகளுடைய ஆலோசனை கூட்டத்தில், என்னை அழைத்து உரையாற்ற செய்தற்கு, பத்திரியாளர் சங்க மாநில தலைவர் சகோதரர், சுபாஸ் அவர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் முதலில், நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும், பத்திரிக்கையாளர்கள் பெரும்பாலும் நியாயத்தின் பக்கம் நின்று மக்களுக்கு, நீதியையும், நியாயத்தையும் கிடைக்க பாடுபட வேண்டும் எனவும், கேட்டுக்கொண்டார். நீங்கள் எவ்வளவோ பல விதமான நெருக்கடிகளுக்கு இடையே தான் பணியாற்றி வருகிறீர்கள் என்பது எங்களுக்குத் நன்றாக தெரியும், இருந்தாலும் முடிந்தவரை உங்களுடைய மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நேர்மையாக ஞாயமான செய்திகளை வெளி உலகத்திற்கு மக்களுக்கும் கொடுங்கள், என கேட்டுக்கொண்டார்.

மேலும், வெளியுலகில் வந்து பணியாற்றும் பெண்களுக்கு பல விதங்களில் பல நெருக்கடிகள் உள்ளன. அதேபோல தான், பத்திரிக்கை துறையில் உள்ள பெண்களுக்கும் பலவிதங்களில் பிரச்சினைகள் உள்ளது, பொது வெளியில் வந்து பணியாற்றும் பெண்கள் துணிவுடன் யாருக்காகவும் எந்த நேரத்திலும் தயங்காமலும், பயப்படாமலும் பணியாற்ற வேண்டும். யார், என்ன சொன்னாலும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் தங்கள் கடமையை செய்ய வேண்டும். வெளியுலகில் வந்து உழைக்கும் பெண்களைப் பற்றி அவர்களுடைய குடும்பத்தாருக்கும், அவர்களின் சுற்றத்தாருக்கும் அவர்களைப் பற்றி நன்றாக தெரியும். மற்றவர்களைப் பற்றி பெண்கள் கவலைப்பட வேண்டியது இல்லை, என கூறினார். “பத்திரிகையாளர்கள் பெண்களுக்கு, பக்க துணையாகவும், பக்கா.. துணையாகவும் இருங்கள்” என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு, திருவாரூர் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பொருளாளர் சுரேஷ், நாகை மாவட்டம் சையத் பக்ருதீன், தஞ்சை மாவட்டம் ஜகுபர் அலி, ஞானபாஸ்கரன், பத்திரிகையாளர் குரல் நிர்வாக ஆசிரியர் முத்துக்குமார், மற்றும் பிரபுதாஸ், நவநீத கண்ணன் மயிலாடுதுறை பிஆர்ஓ தினமணி ஞானவேல், பொருளாளர் இளஞ்செழியன், ஒருங்கிணைப்பாளர் சுந்தரவடிவேல், மற்றும் செந்தில்குமார், ராஜ்மோகன், சையத் ஆசிப், வேதாஸ்டாலின், பிரபாகரன்,
முத்தமிழ் மங்கள்ராஜ் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இறுதியாக மயிலாடுதுறை மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல்.இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed