திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்…
1 min read
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருண் பாட்சா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரகுபதி வரவேற்றார் மாவட்ட துணைத்தலைவர் ராஜா தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

தர்ணா போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் நீதிமாணிக்கம் பேசினார்கள். நிறைவாக மாநிலச் செயலாளர் நாதன் விளக்க உரையாற்றினார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும் முடக்கப்பட்ட 21மாத நிலுவைத் தொகை மற்றும் முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,

அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் போனசாக கொடுக்க வேண்டும். என்பது உட்பட 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

தர்ணாவின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்து என்பன போன்ற பல்வேறு கோஷங்களை முழங்கினர். இந்த தர்ணா போராட்டத்தில் ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

செய்தியாளர்- ஆனந்தன்
நிழல்.இன் – 8939476777