தேனி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில், போடி மாணவர்கள் சாதனை…
1 min read
தேனி மாவட்டம், போடியில், நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் போடி, பெரியகுளம் மாணவர்கள் சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தேனி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்கம், தேனி நேரு யுவகேந்திரா அமைப்பு இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் போடி ஸ்ரீகாமராஜர் வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு ஊர்களை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் பங்கேற்றனர். அதில், எடையின் அடிப்படையில் சீனியர், ஜூனியர், சப் ஜூனியர், கேடட், மினி ஜூனியர் ஆகிய பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்தினார். போட்டிகளில் போடி, பெரியகுளம், கொடுவிலார்பட்டி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பல மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிலம்பாட்ட சங்க தலைவர் சந்திரமோகன், செயல் தலைவர் பொன்ராமர், பொருளாளர் கண்ணப்பன், தேனி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரிதா நடேசன், உப தலைவர் ராஜபாண்டி,

போடி அ.தி.மு.க. நகர செயலாளர் பழனிராஜ், எல்லண்ணா பள்ளி நிர்வாகி பாலசுப்பிரமணி, பள்ளி தலைமையாசிரியர் உஷா, தேனி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க செயலர் சொக்கர் மீனா மாவட்ட பொருளாளர் ஈஸ்வரி, பயிற்சியாளர்கள் பிரபு, மணிமாறன், நாகலிங்கம், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட இணை செயலர் மோனீஸ்வரன் வரவேற்றார். சிலம்பாட்ட பயிற்சியாளரும், வி.என்.பி.சிலம்பாட்ட அகாடமி நிறுவனருமான நீலமேகம் நன்றி கூறினார்.
செய்தியாளர் – அழகர்
நிழல்.இன் – 8939476777