February 24, 2021

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்…

1 min read

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்
சந்தீப் நந்தூரி அவர்கள்
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அமைந்துள்ள தடுப்பூசி போடும் மையத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டார்.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பாக, தொழிலாளர்கள்
சட்ட நகலை எரித்து போராட்டம்…

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு, பல்வேறு தொழிற் சங்கங்கள் சார்பில், தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நகலையும், மின்சார சட்டம் 2020-ம் திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆவதை தடுத்து நிறுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,
தொழிலாளர்கள் சட்டத்தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம் நடத்தினர்.

அதில், தொமுச நிர்வாகி சௌந்தரராஜன், ஏஐடியுசி நிர்வாகிகள் வழக்கறிஞர் முத்தையன், தங்கராஜ், ராஜேந்திரன், சிஐடியு நிர்வாகிகள் இரா.பாரி, காங்கேயன், எம். வீரபத்திரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் சிவக்குமார், சிஐடியு நிர்வாகிகள் சேகர், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *