March 1, 2021

திருவள்ளூர் வடக்கு மாவட்ட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம், ஆரணியில் நடைபெற்றது…

1 min read

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் உள்ள சமுதாய கூடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, ஆரணி நகர செயலாளர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் நெடுஞ்செழியன், மாநிலத் துணைச் செயலாளர் பாக்சர்மணி, மாவட்ட பொருளாளர் தண்டலம் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கோபி நாயினார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகளுக்கு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எவ்வாறு? எதிர் கொள்வது என்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில், மீஞ்சூர் ஒன்றியம் காட்டுப்பள்ளி கிராமத்தில் நடைபெற்று வரும் துறைமுகம் விரிவாக்க பணியை கைவிடக்கோரியும், அப்பகுதி மீனவர்களையும், பொதுமக்களையும் சந்திக்க 20-ம் தேதி மீஞ்சூர் ஒன்றியம் வருகை புரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவனுக்கு வடக்கு மாவட்டத்தின் சார்பாக சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க திரளாக அணி திரண்டு வர வேண்டும் என்றும்,

மக்கள் கருத்து கூட்டத்தை நடத்தாமல் துறைமுக விரிவாக்கப் பணியை செய்து வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதில், மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தின் போது பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 30 பேர் கோபிநாயினார் முன்னிலையில் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில்,பிரசாந்த் என்ற பேரறிவாளன் நன்றி கூறினார்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed