பெரியபாளையம் அருகே கூட்டுறவு சங்கத்தில் தலைவரை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி, கூட்டுறவு சங்க கட்டிடத்தை உறுப்பினர்கள் பூட்டு போட்டனர்…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மெய்யூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக இருந்த சிவராமன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இந்நிலையில், துணைத் தலைவர் நிஷாநந்தினி தலைமையில் கூட்டுறவு கடன் சங்கத்தின் பிற உறுப்பினர்கள் தலைவரை தேர்ந்தெடுக்க ஆலோசனை நடத்த சங்கத்தின் அலுவலகத்திற்கு வந்தனர்.

அதற்க்கு, செயலாளர் ஏழுமலை எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனையடுத்து கூட்டுறவு சங்க துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சங்க ஊழியர்களை வெளியேற்றி கட்டிடத்திற்கு பூட்டு போட்டனர்.

அலுவலகத்தை பூட்டிய உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வலியுறுத்தி மாவட்ட இணை பதிவாளரிடம் சாவியை ஒப்படைத்து முறையிட சென்றனர்.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777