March 2, 2021

பேரறிஞர் அண்ணாவின், 52வது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுகவினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தமிழக முன்னாள் முதல்வரும் தமிழக அரசியல் ஆசானுமான பேரறிஞர் பெருந்தகை
அண்ணாவின் 52-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி அதிமுக தலைமையில் அறந்தாங்கி அதிமுக நகர அவைத்தலைவர் திருநாவுக்கரசு, வடக்குஒன்றிய செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலையில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், அறந்தாங்கி நகர அதிமுக நிர்வாகிகள் முருகேசன், வேதபாபு,
மண்டலமுத்து, மகளிரணி கலா, ரமா, வழக்கறிஞர்கள் ராஜசேகர்.
முத்துவிஜயன் மற்றும் அதிமுக நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் – ஆனந்த்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed