சிறுமியின் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிய நான்கு பேர் கைது, 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல்…
1 min read
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(40) இவர் தனது மகள் பிரித்திகாவுடன்(13) திருமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.

அப்போது மதுரை மாவட்டம் மேலக்கால் வைகையாற்று பாலம் பகுதியில் சாலையோரமுள்ள பேக்கரி கடையில் முன்பு மோட்டார் சைக்கினள நிறுத்தி விட்டு டீ குடித்த போது திடீரென அங்கு வேகமாக வந்த மர்ம ஆசாமி பிரித்திகாவிடமிருந்த ஸ்மார்ட் போனை பறித்து விட்டு டுவீலரில் தப்பியோடி உள்ளார்.

இச்சம்பவ குறித்து, காடுபட்டி போலீசில் கொடுத்த புகாரையெடுத்து இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் மாரிகண்ணன் மற்றும் போலீசார் வழிப்பறி சம்பவம் நடந்த பேக்கரிகடை முன்பு இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்து அதில் பதிவாகி இருந்த உருவம் மற்றும் வழிபறி திருட்டுக்கு பயன்படுத்திய டுவீலர் நம்பர் பிளேட்களை வைத்து விசாரணை செய்தனர்.

இதையெடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை பெத்தானியபுரம் வெற்றிவேல் (20)மனோஜ்குமார் (19) மற்றும் மதுரை மேட்டுதெரு பிரேம்குமார்.(25)அருண்பாண்டியன் (20) ஆகிய நான்குபேரை கைது செய்து வழிபறி திருட்டுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் – சுரேஷ்
நிழல். இன் – 8939476777