திருவண்ணாமலையில், குப்பை மேடாக மாறி வரும், குமார கோயில் தெரு, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
1 min read
திருவண்ணாமலை நகரம் குமர கோயில் தெருவில், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் தங்கள் பணியிடங்களில் சேகரமாகும் குப்பைகளை, கோயிலின் அருகிலேயே தினந்தோறும் கொட்டி வருகின்றனர்.

அதனால், குமார கோயில் தெரு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்லும் குமார கோயில் தெரு, குப்பை மேடாக மாறி வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் உள்ளது.

இந்து சமய அறநிலை துறையும், மாவட்ட நிர்வாகமும், இந்த விசயத்தில் தலையிட்டு, நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, குமர கோயில் தெருவில் உள்ள குப்பைகளை உடனடியாக அப்புறபடுத்த உத்தரவிட வேண்டும் என, திருவண்ணாமலை பகுதி மக்கள் எதிர் பார்த்து வருகின்றனர்.
செய்தியாளர் – மூர்த்தி
நிழல். இன் – 8939476777