திருவண்ணாமலை மாவட்டத்தில், மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டம்…
1 min read
திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக இன்று, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்க் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

தற்போது அரசு துறையில் நாலரை லட்சம் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் உடனே வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட நாற்பத்தி ஒரு மாத காலத்தை பணிக்காலமாக கருதி, ஊதியம் வழங்க வேண்டும்,

கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறந்த ஊழியர்களுக்கு ரூபாய் 50 லட்சமும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரண்டு லட்சமும் வழங்க வேண்டும்,
மருத்துவம் மற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கிட அறிவித்த அரசாணையை அமல்படுத்த வேண்டும்,

கொரோனா பணி பார்க்கும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், அரசுத்தறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும், காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

என்பன, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று மூன்றாவது நாளாக, அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று, பெரியார் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிபுல். இன் – 8939476777