September 23, 2021

திருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக மண்ணுளிப் பாம்பை விற்க முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்…

1 min read
Spread the love

திருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய பேரம் நடப்பதாக வந்த ரகசிய தகவலின் பேரில், திருவள்ளூர் வனச்சரக துறையினர் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த முக்கிய நபரையும் கைது செய்ய நடவடிக்கை தெரிவித்தனர்.

திருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை 2 கோடி ரூபாய் வரை பேரம் பேசி விற்பனை செய்யப்படுவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் வனச்சரகர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வனத்துறையினர் பெரியகுப்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை விற்பனை செய்ய முயன்றதாக உதயகுமார் தங்கமணி மற்றும் பொன்னையன் ஆகிய 3 பேரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். நான்கரை கிலோ எடையும், ஆளுயர அளவுக்கும் உள்ள இந்த மண்ணுளி பாம்பை 2 கோடி ரூபாய் வரை பேரம் பேசி விற்பனை செய்ய முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மண்ணுளி பாம்பில் மருத்துவ குணம் இருப்பதாக தவறான தகவலை பரப்பி அதன் மூலம் இந்த மோசடியில் பலர் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், தற்போது மீண்டும் இந்த மோசடி தொடங்கியுள்ளதாகவும் வனச்சரகர் தெரிவித்தார். இந்த மண்ணுளி பாம்பில் மருத்துவ குணம் இல்லை என்பது மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டு இருப்பதால், பொது மக்கள் யாரும் இதை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இது வரை பிடிபட்ட பாம்புகள் எல்லாம் சின்னதாக இருந்துள்ள நிலையில், தற்போது பிடிபட்டுள்ள பாம்பு பெரியதாக இருப்பதாகவும் தெரிவித்தார். பறிமுதல் செய்த மண்ணுளி பாம்பை வண்டலூர் உயிரியல் பூங்காவில் விடப்படும் என தெரிவித்தார்.

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed