February 27, 2021

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா பார்வையிட்டார்…

1 min read

திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட் மற்றும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை செய்யும் எந்திரத்தினை ( வி வி பி ஏ டி) சரிபார்க்கும் பணிகளை அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆட்சியர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குப் பதிவு இந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 8,423 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 6,826 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 6,926 ( விவிபிஏடி) காகித சோதனை செய்யும் இயந்திரம் என மொத்தம் 22,175 இயந்திரங்களை திருவள்ளூரில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகளை அதற்கான ஊழியர்கள் செய்து வருகின்றனர். இதனையடுத்து ஆட்சியர் பொன்னையா அனைத்துக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் இன்று, அந்த இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் ரமணா, திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *