March 2, 2021

புதுகோட்டை மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை, மத்திய குழு முறையாக பார்வையிடவில்லை, என விவசாயிகள் வேதனை…

1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிடுவதற்கு வந்த மத்திய குழு முறையாக பாதிக்கப்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதியில் பார்வையிடாமல் கண்துடைப்பாக ஒரு பகுதியை மட்டும் பார்வையிடச் சென்றது மிகுந்த வேதனை அளிக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, விவசாயி ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், சுமார் 1.1/2 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் செய்து வருகிறோம்.
அதில் பெரும்பகுதியாக அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், மணமேல்குடி ஆகிய பகுதிகளில் விவசாயத்தை மட்டுமே நம்பி தான் எங்களுடைய வாழ்வாதாரம் உள்ளது.

இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையினால் ஏற்பட்ட விவசாய பாதிப்புக்கான நிவாரணத் தொகை கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்து வந்த நிலையில், மத்திய அரசின் பாதிப்புகளை பார்வையிட வந்த குழு ஏதோ கண் துடைப்புக்காக ஒரு பகுதியை மட்டும் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

முழுவதுமாக பாதிக்கப்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதியை பார்வையிட வரவில்லை. இதனால் எங்கள் பகுதிக்கு நிவாரண தொகை கிடைக்குமோ எனும் அச்சத்தில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

மேலும், மத்திய குழுவின் அறிக்கை தாக்கல் செய்யும் பொழுது முழுமையாக பாதிக்கப்பட்ட கடைமடை பகுதியான அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு முழுமையாக நிவாரண தொகை கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும், என்ற கோரிக்கையையும், பாதிக்கபட்ட விவசாயிகளான எங்கள் தரப்பில் வைத்துள்ளோம், என கூறினார்.

செய்தியாளர் – ஆனந்தன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed