September 23, 2021

பொன்னேரி அருகே, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, வேன் மின்சார டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து, 3பெண்கள் காயம்…

1 min read
Spread the love

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். காலையில் பணிக்கு செல்வதற்காக இவர்களை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் ஆரணியில் வந்தது.

அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் வேனில் பயணித்த 3பெண்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகில் ஆரணி சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து ஆரணி போலீசார் விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனர். டிரான்ஸ்பார்மரில் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

செய்தியாளர் – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed