எல்லாபுரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில், புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜை அடிக்கல் நடும் விழா நடைபெற்றது…
1 min read
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் கே.சுதாகர் தலைமையில் பூமி பூஜை செய்து அடிக்கல் நட்டு வைத்தார்.

இதில், ஊர் பெரியவர் ரமேஷ்பாபு சவுதரி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எ.ஜி.சிவசங்கர், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ரவி, வார்டு உறுப்பினர்கள்
அர்ச்சனா கதிர்வேல், ஆர்.ஜே.எஸ்.சுரேஷ்,
செல்வ பாலாஜி, ஜமுனா பிரேம், ராணி, மற்றும் ஊராட்சி செயலர் சந்திரபாபு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சீனிவாசன்
நிழல். இன் – 8939476777