கும்மிடிப்பூண்டியில், காவல்துறையினர் மன அழுத்தத்தையும், மன உளைச்சலையும், போக்கும் மனவளக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது…
1 min read
காவல் துறையினருக்கு பணி சுமைகளால் ஏற்படும் மன உளைச்சலை போக்கும் நோக்கில், கும்மிடிப்பூண்டியில் காவலர்கள் ஒன்று கூடி கருத்து பரிமாற்றங்களுடன், உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சரகத்தில், கவரப்பேட்டை, ஆரம்பாக்கம், பாதிரிவேடு, கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி சிப்காட் ஆகிய 5 காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு மன அழுத்தத்தையும், மன உளைச்சல்களையும் போக்கும் விதமாக, மனவள பயிற்சி நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற அந்த பயிற்சியில், ஏடிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள், ஆண், பெண் காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய டிஎஸ்பி ரமேஷ்,
கொரோனா காலத்தில் காவலர்கள் அதிகமாக மன ரீதியாக பாதிக்கப்பட்டாலும், அவைகளை மறந்து பணியில் உறுதியாக இருந்த சூழலில், பணி, குடும்பம் இவைகள் இரண்டையும் பக்குவமாக கையாள்வதன் மூலமூம், யோகப்பயிற்சியை தொடர்ந்து பழகுவதன் மூலமும் மன அழுத்தம் கொள்ளாமல் இருக்க பழகி கொண்டால், பணி சுமையால் தற்கொலை, பணி நேரத்தில் மாரடடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவதை சமாளிக்கலாம் என காவலர்களுக்கு அறிவுறை வழங்கினார்.

அதன் பின்னர், பணியின் போது ஏற்படும் குறை நிறைகளை அனைத்து காவலர்களும் தங்களுக்குள் கலந்துரையாடல் நடத்தி, தங்களை சுற்றியுள்ள பிரச்சினைகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.

அதன்பின் பணிச்சுமையால் ஏற்படும் மன உளைச்சலை போக்கும் வகையில் திரைப்பட பாடல்களுக்கு காவலர்கள் உற்சாகமாக பாட்டு பாடியும், நடனமாடியும் மகிழ்ந்தனர்.

நிழல் . இன் – 8939476777