தமிழக முதல்வர் மீஞ்சூரில் பிரச்சாரம் செய்யும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, காஞ்சிபுரம் சரக டிஐஜி ஆய்வு செய்தார்…
1 min read
தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதன்படி, நாளை மறுதினம் திருவள்ளுர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதியாக, மீஞ்சூரில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இதனையடுத்து, முதல்வர் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, காஞ்சிபுரம் டிஐஜி சாமுண்டீஸ்வரி, திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் ஆகியோர் மீஞ்சூர் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பொன்னேரி துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் உடன் இருந்தார் .

முதல்வர் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்தும், மாற்று பாதையில் வாகனங்களை இயக்குவது குறித்தும் காவல் துறை அதிகாரிகளிடம் அவர்கள் அறிவுறுத்தினர். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவாறும் நடவடிக்கைகள் எடுக்கவும் இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டது.

நிழல். இன் – 8939476777