பொன்னேரியில் அதிமுக நிர்வாகி, சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டியதால் பரபரபரப்பு…
1 min read
நாளை மறுநாள் மீஞ்சூரில் தேர்தல் பரப்புரைக்கு முதல்வர் வர உள்ள நிலையில், “அதிமுக பொதுச் செயலாளர் சின்ன அம்மாவே, கழகத்தை வழி நடத்த வருக.. வருக…” என வாசகம் அச்சிடப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்ததால், பொன்னேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் திருவள்ளூர் மாவட்டதில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அதிமுக பொதுச் செயலாளர் சின்ன அம்மாவே, கழகத்தை வழிநடத்த வருக வருக என வாசகம் அச்சிடப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அவை மீஞ்சூர் பேருந்து நிலையம், பிடிஒ அலுவலகம், பஜார் பகுதி, அதே போல பொன்னேரி பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுக மீஞ்சூர் பேரூர் கழக பொருளாளர் எம்.பி.விஜயன் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளார். இது குறித்து விஜயன் கூறுகையில், “அதிமுகவில் நான், மீஞ்சூர் நகர பொருளாளராக இருக்கிறேன். கட்சியின் பொது செயலாளர் சசிகலா தான் எனவும், அதிமுக சசிகலாவுடன் இணைந்து செயலாற்றினால் திமுகவை வீழ்த்தி, எளிதில் வெற்றி பெறலாம் ” எனவும், தெரிவித்தார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல். இன் – 8939476777