சேலம் மாநகர காவல் ஆணையாளர் டி.செந்தில்குமார், சிறந்த காவல் ஆளினர்களை பாராட்டி கௌரவித்தார்…
1 min read
அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்ற சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய 20 காவல் ஆளினர்கள், மாநில அளவில் முதலாம் இடம் பெற்ற சேலம் நகர காவல் நிலைய காவல் ஆளினர்கள் 80 நபர்கள்,
அண்ணா பதக்கம் பெற்ற 2 காவல் ஆளினர்கள்,

மத்திய அரசின் அதி உட்கிரிஷ் சேவா பதக்கம் பெற்ற 3 காவல் ஆளினர்கள், உட்கிரிஷ் சேவா பதக்கம் பெற்ற 6 காவல் ஆளினர்கள், முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்ற 58 காவல் ஆளினர்கள் மற்றும் குடியரசு தினத்தன்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நற்பணி செய்தமைக்கான நற்சான்றிதழ் பெற்ற 16 ஆளினர்கள் உள்ளிட்டோரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் டி. செந்தில்குமார் பாராட்டி, நற்சான்றிதழ்
வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், சேலம் மாநகர காவல் துணை ஆணையர்கள், சேலம் மாநகர கூடுதல் காவல் துணை ஆணையாளர், காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்துகொண்டு
காவல் ஆளினர்களை கௌரவித்தனர்.

செய்தியாளர் – சேலம் தங்கதுரை
நிழல். இன் – 8939476777