திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனாவின் கொடுமையால், மனநிலை பாதிக்கப்பட்டு, தனது குடும்பத்தை பிரிந்த இளைஞர்…
1 min read
நேபாளத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் ஆச்சார்யா, இவருடைய மூத்த மகன் விபின் ஆச்சாரியா, இவர்(22) நேபாள் நாட்டில் பிளஸ் +2 வரை படித்துள்ளார். இவர் வேலை தேடி சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சூழலில் இவருக்கு வேலை இல்லாமல் போனது. அதனால் உணவின்றி தவித்த விபின் ஆச்சார்யா, சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு நிலையில் மனநிலை பாதிக்கப்பட்டு சுயநினைவு இழந்தார்.

விபின் ஆச்சாரியா,
அடிக்கடி தன் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்வதை துண்டிக்கப்பட்ட நிலையில், அவருடைய பெற்றோர்கள் தன் மகனிடம் இருந்து எவ்வித அழைப்பு வராததால், தங்கள் மகன் இருக்கிறாரா இல்லையா ,என்பது கூட தெரியாமல்,
துடிதுடித்து ஒரு நிலையில், விரக்தியின் விளிம்பில் கொரோனா வைரஸால், தமது மகன் உயிரிழந்து இருப்பான், என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆரணி இடையே சாலையில் மன நோயாளியாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார் விபின் ஆச்சாரியா, அவர் குறித்து, அப்பகுதி உள்ள மக்கள் சிலர் டாக்டர் கென்னடி, மற்றும் டாக்டர் பிரபாகர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விபின் ஆச்சாரியாவை பெரியபாளையம் ஆரணி இடையே உள்ள ராள்ளபாடி என்ற பகுதியில் உள்ள மனநல மறுவாழ்வு காப்பகத்தில் அனுமதித்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில்,

அவர் பூரண குணம் அடைந்ததும் மனநல மறுவாழ்வு காப்பகத்தின் உரிமையாளர் கோட்டீஸ்வரன் குணமடைந்த விபின் ஆச்சாரியா குறித்து புகைப்படத்துடன் செய்தியை முகநூலில் பதிவிட்டிருந்தார். இந்த இந்தப் பதிவு நேபாளத்தில் உள்ள கிருஷ்ண பிரசாத் ஆச்சாரியாவின் உறவினர் ஒருவர் பார்த்து விபின் ஆச்சார்யா குறித்து, பெற்றோரிடம் கூறினார்.

இதனை அறிந்த விபின் ஆச்சார்யாவின் தந்தை கிருஷ்ண பிரசாத் ஆச்சார்யா பெரும் மகிழ்ச்சி அடைந்து, நேபாளத்தில் இருந்து கிளம்பி மனநல மறுவாழ்வு காப்பகத்தில் நேரில் சென்று தன் மகனை அடையாளம் காட்டி அவரை அழைத்துச் செல்ல விரும்பினர். இதுகுறித்து, முறையாக மனநல காப்பகத்தில் உரிமையாளர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையாவிடம் நேரில் அழைத்துச் சென்று இதைப்பற்றி கூறி, விபின் ஆச்சாரியாவை தன் சொந்த நாட்டிற்கு அனுப்ப ஒப்புதல் கேட்டிருந்தார். அதன்பேரில், விபின் ஆச்சாரியாவை அவர் தந்தையிடம் ஒப்படைத்து அவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தார். மேலும், இந்த நிகழ்வு நேரில் கண்ட, மற்றும் கேள்விப்பட்ட அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
செய்தியாளர் – சீனிவாசன்
நிழல். இன் – 8939476777