September 23, 2021

பொன்னேரி செயின்ட் ஜேம்ஸ் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் கபாடி போட்டியில் வெற்றி பெற்றனர்…

1 min read
Spread the love

கோவாவில் கடந்த ஜனவரி மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில், மூன்றாவது தேசிய கூட்டமைப்பு கோப்பையின் கபாடி போட்டி நடைபெற்றது. அதில், தமிழகம் சார்பில் பொன்னேரியில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கடந்த 2ஆம் தேதி பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக திரளாக திரண்டு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். தங்கப்பதக்கம் வென்ற மாணவ மாணவிகளை செயின்ட் ஜேம்ஸ் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி லிசி மஞ்சளி அவர்களும் மற்றும் அருட்சகோதரிகளும், உடற்பயிற்சி ஆசிரியர் இளையராசா, தமிழரசன் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

மேலும், அமச்சூர் கபடி கழகத்தின் சார்பாக, கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற கபாடி போட்டி தேர்வில், ஆனந்த் என்ற மாணவர் திருவள்ளூர் மாவட்ட கபடி குழுவில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். அதேபோல் பெண்கள் பிரிவில், கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற போட்டித் தேர்வில் நோபிள் ஜாய்ஸ், இமாகுலேட், திவ்யதர்ஷினி ஆகியோரும் திருவள்ளூர் மாவட்ட கபடி குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

செயின்ட் ஜேம்ஸ் பள்ளியின் சார்பில் தேசிய அளவில் கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் பெயர்கள் விவரம்;
பிரியதர்ஷன், தீபக், மில்லியன், சந்துரு, சிவனேஷ், ஆகாஷ், தனஞ்செழியன், தாவுத்தர், அகஸ்டின், பிரகாஷ்அப்ஸலாம், ரமணா, அபிஷேக்

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுடைய பெயர்கள் விவரம்;
நோப்பிள் ஜாய்ஸ், இம்மாக்குலேட், தனலட்சுமி, திவ்யதர்ஷினி, தீன்தமிழ், ஏசத்தா, கீர்த்தனா திவ்யஸ்ரீ, ஷெரின் ஏஞ்சல் திவ்யதர்ஷினி

கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்; ஜெத்தீஸ்வர், ஜட்சன் ஸ்மித்

நிழல். இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed